புத்தாண்டு தினத்தன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
புத்தாண்டு தினத்தன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
கொரோனா பேரிடர் காலத்துக்கு பிறகு சென்னையில் மின்சார ரெயில்கள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன. இருப்பினும் அரசு விடுமுறை நாட்களில் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்படுகிறது.
அந்த வகையில் நாளை (சனிக்கிழமை) புத்தாண்டு தினத்தையொட்டி தேசிய விடுமுறை நாளான அன்று மூர்மார்க்கெட்-அரக்கோணம், மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை-வேளச்சேரி, கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயங்கும் மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story