கனமழை எதிரொலி - சென்னையில் 4 சுரங்கப்பாதைகள் மூடல்


கனமழை எதிரொலி - சென்னையில் 4 சுரங்கப்பாதைகள் மூடல்
x
தினத்தந்தி 31 Dec 2021 7:32 AM IST (Updated: 31 Dec 2021 7:32 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் 4 முக்கிய சுரங்கபாதைகள் மூடப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.  நடப்பு ஆண்டில் அதிக அளவு மழை பதிவாகி இருந்தது.  இந்த நிலையில், சென்னையில் நேற்று நண்பகலில் திடீரென சாரல் மழை பெய்தது.  இதன்பின்னர், நாள் முழுவதும் கனமழை பெய்தது.

இதன்படி, சென்னை எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, அடையாறு, பெருங்குடி, சென்ட்ரல் மற்றும் பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் மழை பெய்தது.  இதுதவிர, கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது. இதனால் சென்னையின் முக்கிய சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் ஓடுகிறது. பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல சுரங்கபாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் 4 முக்கிய சுரங்கபாதைகள் இன்று  மூடப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. துரைசாமி சுரங்கப்பாதை , ஆர்.பி.ஐ சுரங்கப்பாதை , மேட்லி சுரங்கப்பாதை , ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

Next Story