நேற்றைய கனமழையில் இடிந்து விழுந்த சென்னை பிரபல மாலின் சீலிங்
சென்னையில் நேற்று பெய்த கனமழை காரணமாக பிரபல மாலின் சீலிங் ஒன்று இடிந்து விழுந்துள்ளது
சென்னை,
சென்னை அண்ணா நகரில் 6 அடுக்குகள் கொண்ட பிரபல மால் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மாலில் 250-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் 10 திரைகள் கொண்ட திரையரங்கம் உள்ளது. இந்த மாலிற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வதுண்டு. குறிப்பாக மாலின் மேற்கூரை இரும்பு பைப்புகள் தாங்கி இருக்கக்கூடிய கண்ணாடியால் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் நேற்று மாலை முதல் பெய்து வரும் கனமழையினால் மாலின் பால் சீலிங் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் மாலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதிர்ஷ்டவசமாக ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து தொடர்பாக திருமங்கலம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story