நீலகிரியில் 3 நாட்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை..!
நீலகிரி மாவட்டத்தில் 3 நாட்களுக்குப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி, சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கலெக்டர் எஸ்.பி. அம்ரித் நிருபர்களிடம் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், சுற்றுலா தலங்களில் இன்று, நாளை(சனிக்கிழமை), மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) என 3 நாட்களுக்குப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
பொதுமக்கள் கூட்டம் கூடினால் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், மத வழிபாட்டுத்தலங்கள் இன்று இரவு 11 மணிக்குள் மூடப்பட்டு இருக்க வேண்டும். நள்ளிரவில் அனுமதி இல்லை.
புத்தாண்டு வழிபாட்டில் முககவசம் அணிந்தும், கிருமிநாசினி தெளித்தும் நிலையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி ஈடுபட வேண்டும். 3 நாட்கள் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நடைமுறையை பின்பற்ற தாசில்தார், துணை தாசில்தார் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. போலீசாரும் கண்காணித்து வருகின்றனர் என்றார்.
Related Tags :
Next Story