தஞ்சையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு


தஞ்சையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு
x
தினத்தந்தி 31 Dec 2021 5:40 PM IST (Updated: 31 Dec 2021 5:40 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத லிங்க சிலையை வங்கி லாக்கரில் இருந்து சிலை தடுப்பு போலீசார் மீட்டுள்ளனர்.

தஞ்சாவூர்,

கடந்த 2016 ஆம் ஆண்டு நாகை மாவட்டம் திருக்குவளை கோவிலில் காணாமல் போன மரகத லிங்க சிலை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் அருளானந்த நகரில் உள்ள ஒரு வீட்டில் தொன்மையான சிலைகள் பதுக்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அருளானந்த நகரில் உள்ள சாமியப்பன் என்பவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, பல கோடி ரூபாய் மதிப்புள்ள தொன்மையான பச்சை மரகத லிங்கம் அவரின் வங்கி லாக்கரில் இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, சாமியப்பனின் வங்கி லாக்கரில் இருந்த தொன்மையான பச்சை மரகத லிங்கத்தை அவரது மகன் அருண் பாஸ்கர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். 

மரகத லிங்கம் தொடர்பான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாத நிலையில், அந்த சிலை 2016-ல் திருக்குவளையில் உள்ள கோவிலில் காணாமல் போனது தானா? சாமியப்பனுக்கு மரகத லிங்கம் எப்படி கிடைத்தது? என்பவை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story