சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினி ரசிகர்கள் அவர் வீட்டின் முன்பு திரண்டனர்.
சென்னை
உலகெங்கும் புத்தாண்டு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் புத்தாண்டு தினத்தையொட்டி சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினி ரசிகர்கள் அவர் வீட்டின் முன்பு திரண்டனர்.
ரசிகர்கள் வீட்டின் முன்பு இருந்ததை அறிந்த ரஜினிகாந்த் வீட்டின் முன்பு குவிந்து இருந்த ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்..இதனால் அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.அப்போது ரசிகர்கள் தெய்வமே .. என்றும் தலைவா என்றும் கோஷம் எழுப்பினர் புத்தாண்டு வாழ்த்துக்கள் 'தலைவா' என ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பினர்.
ரஜினிகாந்த் இதுவரை 168 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். அவருடைய 169-வது படத்தில் ஜோடியாக நடிக்க இருக்கும் கதாநாயகி யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.