விழுப்புரம் அருகே கொட்டும் மழையில் விவசாயிகள் சாலை மறியல்


விழுப்புரம் அருகே கொட்டும் மழையில் விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 1 Jan 2022 8:29 AM GMT (Updated: 2022-01-01T13:59:22+05:30)

அதிகளவில் கரும்புகளை கொள்முதல் செய்ய வலியுறுத்தி விழுப்புரம் அருகே கொட்டும் மழையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்,

பொங்கல் பரிசு தொகுப்பாக ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக கரும்புகளை அதிகளவில் கொள்முதல் செய்ய வலியுறுத்தி விழுப்புரம் அருகே பிடாகம் மெயின்ரோட்டில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கொட்டும் மழையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story