சென்னை: கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை!


சென்னை: கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை!
x
தினத்தந்தி 1 Jan 2022 3:34 PM GMT (Updated: 2022-01-01T21:04:42+05:30)

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக நாளை முதல் அனைத்து கடற்கரைகளுக்கும் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக நாளை முதல் சென்னை மெரினா கடற்கரை உள்பட சென்னையில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கும்  செல்ல சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

எனினும், பிரத்தியேக நடைபாதையில் செல்ல மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நடை பயிற்சி செல்லும் பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இத்தகைய கட்டுப்பாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக அறிவிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story