கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிட வேண்டும்: டாக்டர் ராமதாஸ்


கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிட வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
x
தினத்தந்தி 1 Jan 2022 9:49 PM GMT (Updated: 2022-01-02T03:19:05+05:30)

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழர்கள் என்ற வகையில் நம் அனைவருக்கும் உலக அளவில் பெருமை தேடி தந்தவை கீழடியில் கடந்த 7 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் அகழாய்வுகள்தான். கீழடி அகழாய்வுகளின் மூலம் தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உலகத்திற்கு உணர்த்த முடியும் என்ற நிலையில், அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் முடிவுகளை பல ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகள் வெளியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது.

கீழடி அகழாய்வின் முதல் 3 கட்ட அறிக்கைகளை விரைந்து வெளியிட வேண்டும் என ஐகோர்ட்டு ஆணையிட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.

மத்திய தொல்லியல் துறையின் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கடந்த செப்டம்பர் மாதமே தமிழகத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு விட்டார். அவருடன் ஒத்துழைப்பை ஏற்படுத்தி கொண்டு, முதல் 3 கட்ட தொல்லியல் அகழாய்வு அறிக்கைகளை விரைந்து வெளியிட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் கீழடியில் 8-வது கட்ட அகழாய்வை விரைவில் தொடங்கவும் அரசு நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story