தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 2 Jan 2022 7:32 AM GMT (Updated: 2022-01-02T13:02:11+05:30)

ஜனவரி 4ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்களில் மட்டும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு

 சென்னை

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ;

தமிழகத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக  தேனி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று  இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு.

ஜனவரி 4ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்களில் மட்டும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு .சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு  .ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு  வாய்ப்பு .குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த கற்று வீசக்கூடும் என்பதால் இந்த  பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு  செல்ல வேண்டாம்  என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 

Next Story