கொரோனா தொற்று தடுப்பு சாதனங்கள் வழங்க கோரி டாஸ்மாக் பணியாளர்கள் 5-ந் தேதி ஆர்ப்பாட்டம்


கொரோனா தொற்று தடுப்பு சாதனங்கள் வழங்க கோரி டாஸ்மாக் பணியாளர்கள் 5-ந் தேதி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Jan 2022 6:43 PM GMT (Updated: 2 Jan 2022 6:43 PM GMT)

கொரோனா தொற்று தடுப்பு சாதனங்கள் வழங்க கோரி டாஸ்மாக் பணியாளர்கள் 5-ந் தேதி ஆர்ப்பாட்டம்.

சென்னை,

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க (ஏ.ஐ.டி.யூ.சி.) மாநிலத் தலைவர் நா.பெரியசாமி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

டாஸ்மாக் மதுபான விற்பனைப் பிரிவில் பணியாற்றி வரும் 25 ஆயிரம் பணியாளர்கள் கடந்த 19 ஆண்டுகளாக ஒப்பந்த பணியாளர்களாகவே நடத்தப்பட்டு வருகின்றனர். இதனால், பணி பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. டாஸ்மாக் நிர்வாகம் பணியாளர்களின் குறைந்தபட்ச கோரிக்கைகளைக் கூட காது கொடுத்து கேட்பதிலும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் நியாயமற்ற பணியாளர் நடைமுறையை கடைபிடிக்கிறது.

குறிப்பாக மதுபான விற்பனைக் கடைகளில் பெரும் கூட்டத்தை சந்தித்து வரும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முக கவசம், கையுறைகள், தடுப்பு மருந்துகள் மற்றும் கிருமிநாசினிகள் வழங்குவதில் மிகுந்த அலட்சியம் காட்டப்படுகிறது.

இது தொடர்பாக சங்க நிர்வாகிகள் மேலாண்மை இயக்குனரை அணுகியும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகிற 5-ந் தேதி மேலாண்மை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தும் நிலைக்கு பணியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story