வேலுநாச்சியார், கட்டப்பொம்மனின் தேசப்பற்றை போற்றுவோம்: ராமதாஸ்


வேலுநாச்சியார், கட்டப்பொம்மனின் தேசப்பற்றை போற்றுவோம்:  ராமதாஸ்
x
தினத்தந்தி 4 Jan 2022 12:24 AM GMT (Updated: 4 Jan 2022 12:24 AM GMT)

வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டப்பொம்மனின் தேசப்பற்றை போற்றுவோம் என்று ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.



சென்னை,


பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில், வீரமங்கை வேலுநாச்சியாரின் 292வது பிறந்தநாளில் அவரது வீரத்தையும், தீரத்தையும், தேசப்பற்றையும் போற்றுவோம். வெள்ளையர்களை எதிர்க்க வடஇந்திய மன்னர்கள் அஞ்சிய காலத்தில், 242 ஆண்டுகளுக்கு முன்பே தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி ஆங்கிலேய படைகளை அழித்து வெற்றிகளை குவித்தவர்.

வீரத்தில் ஜான்சி ராணிக்கும் முன்னோடி வேலுநாச்சியார் தான். வேலுநாச்சியாருக்கு பிறகு 85 ஆண்டுகள் கழித்து தான் ஜான்சி ராணிக்கு ஆங்கிலேயரை எதிர்க்கும் துணிச்சல் வந்தது. பன்மொழி புலமை, ராஜதந்திரம் ஆகியவற்றில் சிறந்த நாச்சியார், இன்றைய மகளிர் முன்னேற்றத்திற்கு முன்னுதாரணம்.

வெள்ளையருக்கு எதிரான விடுதலை போராட்டத்திற்கு புதிய உத்வேகம் ஊட்டிய வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு இன்று 262வது பிறந்தநாள். கேட்டாலே, சிறுவர்கள் மனதிலும் வீரம் ஊறும் வரலாற்றுக்கு சொந்தக்காரர் கட்டபொம்மன். அவரது வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம் என்று அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story