தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை ஊட்டி செல்கிறார்


தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை ஊட்டி செல்கிறார்
x
தினத்தந்தி 4 Jan 2022 4:57 AM GMT (Updated: 2022-01-04T10:27:13+05:30)

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை ஊட்டி செல்கிறார்.

ஊட்டி, 

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த அக்டோபர் மாதம் 5 நாள் சுற்றுப் பயணமாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தார். ஊட்டி ராஜ்பவனில் தங்கி இருந்து பைக்காரா படகு இல்லம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, பசுமையான தேயிலை தோட்டங்கள், அப்பர்பவானி அணை போன்றவற்றை தனது குடும்பத்தினருடன் கண்டு ரசித்தார். 

இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி நாளை (புதன்கிழமை) மாலையில் ஊட்டிக்கு வருகை தருகிறார். தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் கவர்னர் உரையாற்றி விட்டு தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவை வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் ஊட்டிக்கு வருகிறார். அவர் அன்று இரவு ராஜ்பவனில் தங்குகிறார். இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பின்னர் 7-ந் தேதி அவர் ஊட்டியில் இருந்து புறப்பட்டு கார் மூலம் கோவை சென்றடைகிறார்.

பின்னர் அங்கிருந்து சென்னை திரும்புகிறார். கவர்னர் வருகையை ஒட்டி ஊட்டி ராஜ்பவன் மற்றும் சேரிங்கிராஸ் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Next Story