கோவையில் ஒரே மருத்துவமனையில் 3 டாக்டர்கள் உள்பட 5 பேருக்கு கொரோனா


கோவையில் ஒரே மருத்துவமனையில் 3 டாக்டர்கள் உள்பட 5 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 4 Jan 2022 5:58 AM GMT (Updated: 4 Jan 2022 5:58 AM GMT)

கோவையில் ஒரே மருத்துவமனையில் 3 டாக்டர்கள் உள்பட 5 பேருக்கு கொரோனா உறுதியானது.

கோவை,

கோவை காந்திபுரம் 5-வது வீதியில் ஜீவன் கிளினிக் உள்ளது. இங்கு பணியாற்றும் டாக்டர்கள் உள்பட 5-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது.

இதையடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அதில் 3 டாக்டர்கள் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதை அடுத்து அவர்கள் 5 பேரும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கோவையில் பல மாதங்களுக்குப் பிறகு ஒரே பகுதியில் 5 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காந்திபுரம் 5-வது வீதியில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Story