மாநகராட்சி தேர்தல்:பா.ஜ.க.வில் வேட்பாளர்கள் நேர்காணல் தொடங்கியது


மாநகராட்சி தேர்தல்:பா.ஜ.க.வில் வேட்பாளர்கள் நேர்காணல் தொடங்கியது
x
தினத்தந்தி 5 Jan 2022 7:15 PM GMT (Updated: 5 Jan 2022 7:15 PM GMT)

மாநகராட்சி தேர்தல்:பா.ஜ.க.வில் வேட்பாளர்கள் நேர்காணல் தொடங்கியது.

சென்னை,

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட விரும்புவோர்களிடம் சென்னை கமலாலயத்தில் நேற்று நேர்காணல் தொடங்கியது.

முதல் நாளான நேற்று ஆயிரம் விளக்கு, துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் உள்ளடங்கிய மாநகராட்சி வார்டுகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்கள் காலையிலும், வில்லிவாக்கம், எழும்பூர், அண்ணாநகர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் உள்ளடங்கிய மாநகராட்சி வார்டுகளில் போட்டியிட விண்ணப்பித்திருந்தவர்கள் மாலையிலும் நேர்காணலில் கலந்துகொண்டனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பா.ஜ.க. மாநில குழு தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் பா.ஜ.க. பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், சென்னை மண்டல மாநகராட்சி பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன், துணைத் தலைவர் வி.பி.துரைசாமி ஆகியோர் முன்னிலையில் வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெற்றது.

தொடர்ந்து வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெற உள்ளது.

Next Story