தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை: கவர்னரின் உரை ஏமாற்றம் அளிக்கிறது


தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை: கவர்னரின் உரை ஏமாற்றம் அளிக்கிறது
x
தினத்தந்தி 5 Jan 2022 8:15 PM GMT (Updated: 2022-01-06T01:45:29+05:30)

தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை: கவர்னரின் உரை ஏமாற்றம் அளிக்கிறது டாக்டர் ராமதாஸ் அறிக்கை.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது தொடர்பான எந்த அறிவிப்பும் கவர்னர் உரையில் இடம்பெறவில்லை. தமிழ்நாட்டைப் பாதிக்கும் முக்கிய சிக்கல்களில்கூட தெளிவான செயல்திட்டங்கள் இடம்பெறாத கவர்னரின் உரை ஏமாற்றம் அளிக்கிறது.

கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்தியது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக தமிழக அரசை பாராட்டும் வாசகங்கள் மட்டும்தான் கவர்னர் உரை முழுவதும் நிறைந்துள்ளன. மக்களுக்கு பயனளிக்கும் அறிவிப்புகளை தேடினாலும் கிடைக்கவில்லை. நீட் விலக்கு பெறுவதற்கும், ஜனாதிபதியின் ஒப்புதலை பெறுவதற்கும் அரசு எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது என்பதை கவர்னரின் வார்த்தைகளால் அறிவிக்க செய்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யாதது ஏமாற்றம் அளிக்கிறது.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான இழப்பீடு, குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை, மாதந்திர மின்கட்டண வசூல் போன்ற தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்தும் கவர்னர் உரையில் எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story