தாய்-மகள் தூக்கு போட்டு தற்கொலை...! என்ன காரணம்

ஓசூரில் தாய்-மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர் என்ன காரணம் என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் மகபூப்பாஷா. இவர் ஓசூர் அருகே பேரண்டபள்ளியில் எலெக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி நூர்ஜான் (38) மகள் மோசின்ஜான் (17). 10- ஆம் வகுப்பு வரை படித்துள்ள இந்த சிறுமி, கம்ப்யூட்டர் வகுப்பிற்கு சென்று படித்து வந்தார்.
மகபூப்பாஷா நேற்று இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்தார். அந்த நேரத்தில், நூர்ஜானும் அவரது மகள் மோசின்ஜானும் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இன்று நீண்ட நேரமாகியும் அவர்கள் வீட்டுக் கதவு திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தில் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது, தாயும், மகளும் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் தந்தனர்.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story