‘வலிமை’ அஜித் போல் சாகசம் செய்ய நினைத்து 'பல்ப்' வாங்கிய வாலிபர்கள் - வீடியோ


‘வலிமை’ அஜித் போல் சாகசம் செய்ய நினைத்து பல்ப் வாங்கிய வாலிபர்கள் - வீடியோ
x
தினத்தந்தி 6 Jan 2022 1:55 PM GMT (Updated: 2022-01-06T19:25:16+05:30)

வலிமை அஜித் போல் சாகசம் செய்ய நினைத்து வாலிபர்கள் செய்த செயல், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

காரைக்குடி, 

நடிகர் அஜித்குமார் நடித்த வலிமை திரைப்படம் பொங்கல் திருநாளையொட்டி தியேட்டர்களில் வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக தேதி குறிப்பிடாமல் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த படத்தில் உள்ள ஒரு காட்சியில் நடிகர் அஜித்குமார் ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பாக கவச உடையில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று வீலிங் செய்ய முயலும்போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி அவர் கீழே விழுந்து அதன் பின்னர் உடனடியாக எழுந்து அந்த மோட்டார் சைக்கிளில் செல்வார். 

அந்த காட்சியை பார்த்த சில இளைஞர்கள் அதேபோல் தற்போது பல்வேறு இடங்களில் அந்த முயற்சியை செய்து வருகின்றனர். காரைக்குடி அருகே கோட்டையூர் பஸ் நிறுத்த பகுதியில் மாலை பள்ளி விடும் வேளையில் ஏராளமான பள்ளி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்தனர். 

அப்போது புதுவயல் பகுதியில் இருந்து வந்த 20 வயது மதிப்புடைய 2 இளைஞர்கள் (ஹெல்மெட் அணியாமல்) நவீன மோட்டார் சைக்கிளில்  தாங்கள் ஓட்டி வந்த அந்த மோட்டார் சைக்கிளை நடுரோட்டில் வீலிங் செய்தனர்.

அப்போது திடீரென நிலை தடுமாறிய அந்த இளைஞர்கள் 2 பேரும் நடுரோட்டில் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். மேலும் அவர்கள் 2 பேரும் ஹெல்மெட் அணியாத நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

இந்த வீடியோவை அங்கிருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவானது. தற்போது அந்த இளைஞர்கள் சாகசம் செய்து கீழே விழுந்து எழுந்த அந்த வீடியோவை நடிகர் வடிவேலு நடித்த நகைச்சுவை காட்சியுடன் சேர்த்து காரைக்குடி பகுதியில் உள்ள இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரப்பி வருகின்றனர். Next Story