மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது சசிகலா கண்டனம் + "||" + Sasikala condemns Pongal gift package disappointing people

பொங்கல் பரிசு தொகுப்பு மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது சசிகலா கண்டனம்

பொங்கல் பரிசு தொகுப்பு மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது சசிகலா கண்டனம்
பொங்கல் பரிசு தொகுப்பு மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது சசிகலா கண்டனம்.
சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தி.மு.க அரசு அறிவித்தது. இதனை பார்த்து பொதுமக்கள் ஆர்வத்துடன் ரேஷன் கடைகளுக்கு சென்று வாங்கினர். ஆனால் பொருட்களின் தரத்தை பார்த்தபிறகு மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். புழுவுடன் உள்ள அரிசி, வெல்லம் என்ற பெயரில் பிசின் போன்ற ஒரு பொருளை அடைத்து கொடுக்கப்பட்டதை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


இப்பரிசு தொகுப்பு மக்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதற்கு பதில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதற்கு பதிலாக பண்டிகை கால கூடுதல் செலவுகளை சமாளிக்கும் வகையில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயாவது கொடுத்திருந்தால் அது பயனுள்ளதாக அமைந்திருக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 25 முதல் 31-ந்தேதி வரை விலைவாசி உயர்வை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்..!!
25 முதல் 31-ந்தேதி வரை விலைவாசி உயர்வை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு இடதுசாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
2. கல்பாக்கம் அணுமின் நிலைய பணிக்கு இந்தியில் தேர்வு: மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம்
கல்பாக்கம் அணுமின் நிலைய பணிக்கு இந்தியில் தேர்வு: மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம்.
3. ‘கோவில் நடைமுறைகளில் அரசு தலையிடக்கூடாது’ - சசிகலா பேட்டி
‘கோவில் நடைமுறைகளில் அரசு தலையிடக்கூடாது’ - சசிகலா பேட்டி.
4. விரைவில் அரசியல் பயணம்...! ஜெயலலிதா ஆட்சியை போன்றே குறையில்லா ஆட்சி ...! - சசிகலா சொல்கிறார்
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா எப்படி ஆட்சி செய்தார்களோ, நிச்சயமாக அதேமாதிரி எந்த குறையும் இல்லாமல் ஆட்சி செய்வோம் என சசிகலா கூறினார்.
5. யூதர்கள் குறித்து சர்ச்சை கருத்து: ரஷியாவுக்கு இஸ்ரேல் கடும் கண்டனம்
யூதர்கள் குறித்து சர்ச்சை கருத்தினை தெரிவித்த ரஷியாவுக்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.