மாநில செய்திகள்

போலீஸ் நிலையம் எதிரே பயங்கரம்: வெடிகுண்டு வீசி வாலிபர் படுகொலை - காய்கறி கடைக்காரரும் வெட்டிக்கொலை + "||" + Terror in front of the police station: Bomb throwing youth murder - vegetable shopkeeper murder

போலீஸ் நிலையம் எதிரே பயங்கரம்: வெடிகுண்டு வீசி வாலிபர் படுகொலை - காய்கறி கடைக்காரரும் வெட்டிக்கொலை

போலீஸ் நிலையம் எதிரே பயங்கரம்: வெடிகுண்டு வீசி வாலிபர் படுகொலை - காய்கறி கடைக்காரரும் வெட்டிக்கொலை
செங்கல்பட்டு போலீஸ்நிலையம் எதிரே வெடிகுண்டு வீசி வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். காய்கறி கடைக்காரரும் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு,

செங்கல்பட்டு கே.கே.தெரு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் என்ற அப்பு கார்த்திக் (வயது 30). நேற்று மாலை செங்கல்பட்டு டவுன் போலீஸ்நிலையம் எதிரே கார்த்திக் டீ குடிக்க வந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் கார்த்திக் மீது யாரும் எதிர்பாராத வகையில் நாட்டு வெடிகுண்டு வீசி கத்தியால் சரமாரியாக வெட்டினர்.


உருதெரியாமல் தலையை சிதைத்துவிட்டு அங்கிருந்து மர்மநபர்கள் தப்பிச்சென்று விட்டனர். இதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த பகுதி செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம், காய்கறி சந்தை என பரபரப்பாக உள்ள பகுதி ஆகும்.

மற்றொருவரும் கொலை

செங்கல்பட்டு மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் மகேஷ் (22). காய்கறி வியாபாரி. இவரது வீடு செங்கல்பட்டு டவுன் போலீஸ் நிலையத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. மகேஷ் தனது வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தார். அப்போது அதே கும்பல் வீட்டுக்குள் புகுந்து மகேஷை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது.

அடுத்தடுத்து இரட்டை கொலை சம்பவம் குறித்து அறிந்த செங்கல்பட்டு டவுன் போலீசார் அவர்கள் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதனை தொடர்ந்து தப்பியோடிய நபர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இரட்டை கொலை சம்பவத்தால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்

1. நைஜீரியாவில் பள்ளி மாணவி கல்லால் அடித்து கொலை: சக மாணவர்கள் வெறிச்செயல்
நைஜீரியாவில் பள்ளி மாணவி ஒருவர் சக மாணவர்களால் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2. உளுந்தூர்பேட்டை அருகே வடமாநில இளைஞர் கொன்று புதைப்பு..!
உளுந்தூர்பேட்டை அருகே வீட்டில் டைல்ஸ் பதிக்க வந்த வடமாநில இளைஞர் கொன்று புதைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. சித்தியை பழிவாங்குவதாக நினைத்து ஆள்மாறாட்டத்தில் பாட்டியை வெட்டிக்கொன்ற வாலிபர் கைது..!
சித்தியை பழிவாங்குவதாக நினைத்து ஆள்மாறாட்டத்தில் பாட்டியை வெட்டிக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
4. இரட்டை கொலை வழக்கு: அமெரிக்காவில் இருந்து வந்த தொழில் அதிபரின் மகன், மகளிடம் விசாரணை
சென்னை மயிலாப்பூரில் கொலை செய்யப்பட்ட தொழில் அதிபர் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் தகனம் செய்யப்பட்டது. அமெரிக்காவில் இருந்து வந்த தொழில் அதிபரின் மகன், மகளிடம் இறுதிக்கட்ட விசாரணை நடத்தப்படுகிறது.
5. திருவள்ளூர் அருகே பிரபல ரவுடி கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்..!
மீச்சூர் அருகே பிரபல ரவுடி கொலை வழக்கில் போலிசார் 5 பேரை கைது செய்த சிறையில் அடைத்தனர்.