கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து - சட்டசபையில் இன்று மசோதா தாக்கல்


கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து - சட்டசபையில் இன்று மசோதா தாக்கல்
x
தினத்தந்தி 7 Jan 2022 3:23 AM GMT (Updated: 7 Jan 2022 3:23 AM GMT)

கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த கூட்டறவு சங்க தேர்தலை ரத்துசெய்ய சட்டசபையில் இன்று மசோத தாக்கல் செய்யப்பட உள்ளது.

சென்னை,

கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலில் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், அதிமுக ஆட்சியில் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என சட்டசபையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. அதன்படி, சட்டசபையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இந்த மசோதாவை இன்று தாக்கல் செய்கிறார்.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலில் தேர்வான நபர்களின் பதவிக்காலம் 2023 ஆண்டு வரை உள்ள நிலையில்,அதனை ரத்து செய்வதற்கான மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

பல்வேறு மாவட்டங்களில் நகைக்கடன் வழங்கப்பட்டதில்,கூட்டுறவு சங்க தேர்தலில் தேர்வான நபர்கள் மூலம் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில்,கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

Next Story