சென்னையில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் - ரூ.11.94 லட்சம் வசூல்


சென்னையில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் - ரூ.11.94 லட்சம் வசூல்
x
தினத்தந்தி 9 Jan 2022 8:10 AM GMT (Updated: 9 Jan 2022 8:10 AM GMT)

சென்னையில் நேற்று முக கவசம் அணியாத 5,917 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்தும் விதமாக  தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முக கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. 

இதனையடுத்து பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்கள், கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் உள்ளிட்டோருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் நேற்றைய தினம் பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இதில் முக கவசம் அணியாத 5,917 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.11.94 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக சென்னை பெருநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 318 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இரவு நேர ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 761 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story