மாநில செய்திகள்

வேகமாக பரவும் கொரோனா: தமிழகத்தில் ஒருநாள் பாதிப்பு 14 ஆயிரத்தை நெருங்கியது + "||" + The daily impact in Tamil Nadu is close to 14 thousand

வேகமாக பரவும் கொரோனா: தமிழகத்தில் ஒருநாள் பாதிப்பு 14 ஆயிரத்தை நெருங்கியது

வேகமாக பரவும் கொரோனா: தமிழகத்தில் ஒருநாள் பாதிப்பு 14 ஆயிரத்தை நெருங்கியது
தமிழகத்தில் ஒரே நாளில் 13,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

1,35,266 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 13,990 ஆக உள்ளது.  தமிழகத்தில் 13,958 வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 32 பேர் என 13,990 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மேலும் 6,190 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் ஏற்கனவே 6,186 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு 6,190 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் மேலும் 11 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,866 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 8 பேரும், தனியார் மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்தனர். 

கொரோனாவில் இருந்து மேலும் 2,547 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 27, 14,643 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 62,767 ஆக உயர்ந்துள்ளது. 

மாவட்டம் வாரியாக கொரோனா பாதித்த எண்ணிக்கை விவரம்:

செங்கல்பட்டில் 1,512 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,696 ஆக அதிகரித்துள்ளது.

திருவள்ளூரில் 702 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,054 ஆக உயர்ந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் 343 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 508 ஆக அதிகரித்துள்ளது. 

திருச்சியில் 275 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 348 ஆக அதிகரித்துள்ளது. 

வேலூரில் 295 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 236 ஆக குறைந்துள்ளது. 

மதுரையில் 348 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 330 ஆக குறைந்தது. 

கோவையில் 608 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 602 ஆக குறைந்துள்ளது. 

திருப்பூர் - 238, ராணிப்பேட்டை - 272, குமரி -244, விருதுநகர் -222, தூத்துக்குடி -176, கடலூர் -162

தி.மலை -149, தஞ்சை -148, நெல்லை -137, சேலம் -133, கிருஷ்ணகிரி -132

ஈரோடு -123, நாமக்கல் -109, நீலகிரி -92, விழுப்புரம் -83 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.