தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டியது


தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 11 Jan 2022 2:27 PM GMT (Updated: 11 Jan 2022 2:27 PM GMT)

தமிழகத்தில் நேற்று தொற்று பாதிப்பு 13,990- ஆக பதிவான நிலையில் இன்று 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால்  மேலும்  20 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  36,886 ஆக அதிகரித்துள்ளது. 

தொற்று பாதிப்பைக் கண்டறிய  1,35,672- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 75,083- ஆக உயர்ந்துள்ளது.   கடந்த 1 ஆம் தேதி ஒருநாள் பாதிப்பு 1,489- அக இருந்த நிலையில், வெறும் நாட்களில் தொற்று பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. 

Next Story