புதுக்கோட்டை அப்துல்லா எம்.பி.க்கு கொரோனா


புதுக்கோட்டை அப்துல்லா எம்.பி.க்கு கொரோனா
x
தினத்தந்தி 11 Jan 2022 6:02 PM GMT (Updated: 11 Jan 2022 6:02 PM GMT)

புதுக்கோட்டை அப்துல்லா எம்.பி.க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை:
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த அப்துல்லா எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் உடல் வலி, ஜூரம் இருந்த நிலையில் பரிசோதனை செய்ததில் ‘பாசிட்டிவ்’ என வந்ததாகவும், தன்னுடன் இருந்தவர்கள், தங்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளுங்கள் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அவர் சென்னையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

Next Story