ஆன்லைன் செயலி மூலம் நகை-பணம், மோட்டார் சைக்கிளை இழந்த வாலிபர் - பகீர் பின்னணி ...


ஆன்லைன் செயலி மூலம் நகை-பணம், மோட்டார் சைக்கிளை இழந்த வாலிபர் - பகீர் பின்னணி ...
x
தினத்தந்தி 11 Jan 2022 9:04 PM GMT (Updated: 2022-01-12T06:11:00+05:30)

ஆன்லைன் செயலி மூலம் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட வாலிபர் ஒருவர், நேரில் அந்த சுகத்தை அடைய விரும்பி, பெண் ஒருவரிடம் மோட்டார் சைக்கிள் மற்றும் நகை-பணத்தை இழந்தார். சென்னையில் இந்த பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னை,

ஆன்லைன் மூலம் இளம்பெண்களுடன் செக்ஸ் விளையாட்டில் ஈடுபட உதவும் புதுமையான செயலி (ஆப்) ஒன்று தற்போது செயல்பாட்டில் உள்ளது. தற்போது இளைஞர்கள் மத்தியில் இந்த செக்ஸ் விளையாட்டு செயலி மிகவும் பிரபலமானது.

இந்த செயலி மூலம் ரூ.5 ஆயிரம் பணம் கட்டினால் போதும், பணம் கட்டியவர் போனில் அழகழகான பல இளம்பெண்கள் தோன்றுவார்கள். அவர்களிடம் பணம் கட்டியவர் தங்களது விருப்பப்படி செக்ஸ் விளையாட்டில் 2 மணி நேரம் ஈடுபடலாம். அந்த பெண்ணை நிர்வாணமாக ரசிக்க விரும்பினால் கூட அது நடக்கும்.

பெண்களை வைத்து ஆன்லைன் மூலம் நடத்தும் இந்த விசித்திர விபசார விளையாட்டு தற்போது ஆன்லைன் உலகில் பிரபலம். ஆன்லைன் வியாபாரம் பிரபலமான இந்த உலகில் ஆன்லைன் மூலம் அரங்கேறும் இந்த விசித்திர விபசார விளையாட்டில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர், நேரில் சுகம் காண விரும்பி பணம்-நகையை இழந்துள்ளார். தற்போது பரிதாபமாக உரிய நடவடிக்கை கேட்டு, போலீஸ் நிலைய கதவை தட்டி உள்ளார்.

மருத்துவ பிரதிநிதி

சென்னை சூளைமேட்டை சேர்ந்த அந்த இளைஞர் மருத்துவ பிரதிநிதியாக வேலை செய்கிறார். ரூ.5 ஆயிரம் பணம் கட்டி ஆன்லைனில் சுகம் அனுபவித்த அந்த இளைஞர், ரூ.30 ஆயிரம் பணம் கட்டி,1 நாள் முழுக்க குறிப்பிட்ட இளம்பெண்ணுடன் நேரில் உல்லாசம் அனுபவிக்க விரும்பினார்.

2 மாதமாக கடும் போராட்டத்துக்கு பிறகு, அந்த இளம்பெண் கே.கே. நகர் பகுதிக்கு நேரில் வரச்சொன்னார். அதை நம்பி ஆசையுடன் சென்ற அந்த இளைஞர் நேரில் சந்தித்த காட்சி அதிர்ச்சியை கொடுத்தது.

நகை-பணம்- பைக் பறிப்பு

குறிப்பிட்ட இளம்பெண் அங்கு 4 பேருடன் வந்து, இளைஞருக்கு அடி-உதை கொடுத்து அவர் அணிந்திருந்த நகைகள்- ரொக்கப்பணம் மற்றும் இளைஞரின் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறித்து சென்று விட்டார்.

பணம்-நகை மற்றும் மோட்டார் சைக்கிளை பறிகொடுத்த இளைஞர் இது குறித்து குமரன் நகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் இந்த விபரீத கொள்ளை சம்பவம் பற்றி விசாரித்து வருகிறார்கள்.


Next Story