பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச துணிக்கு பதில் வங்கிக்கணக்கில் பணம் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் அறிவிப்பு


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச துணிக்கு பதில் வங்கிக்கணக்கில் பணம் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Jan 2022 7:13 PM GMT (Updated: 12 Jan 2022 7:13 PM GMT)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச துணிக்கு பதிலாக வங்கிக்கணக்கில் ரொக்கப் பணம் செலுத்தப்படும் என்று அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கூறியுள்ளார்.

புதுச்சேரி
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச துணிக்கு பதிலாக வங்கிக்கணக்கில் ரொக்கப் பணம் செலுத்தப்படும் என்று அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கூறியுள்ளார்.

வங்கிக்கணக்கில் பணம்

புதுவையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பொங்கல் பண்டிகைக்கு இலவச துணிகள்    வழங்கப்பட்டு வந்தது. கடந்த  காங்கிரஸ் ஆட்சியில் இலவச துணிகள் வழங்க, கவர்னராக இருந்த கிரண்பெடி எதிர்ப்பு தெரிவித்ததால் இலவச துணிக்கான பணம் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது.
தற்போது ரங்கசாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும் பணத்துக்கு பதிலாக இலவச துணிகள் வழங்க நடவடிக்கை எடுத்தது. இருந்தபோதிலும் தற்போது துணிக்கு பதிலாக பணமே வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து   அமைச்சர் தேனீ.ஜெயக்குமார்   அலுவலக செய்திக்குறிப்பில்   கூறி யிருப்பதாவது:-

ரூ.12.13 கோடி

முதல்-அமைச்சர்   ரங்க சாமியின் அறிவுறுத்தலின்படி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரின் உத்தரவின்பேரில் இத்துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் ஏழை மக்களுக்கான இலவச துணி வகைகள் வழங்கும் திட்டத்தின்கீழ் குடும்ப உணவு   பங்கீட்டு அட்டைதாரர்களில் அட்டவணை,      பழங்குடி    இன மக்கள், மீனவர், நெசவாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நீங்கலாக ஒன்றியத்தில் உள்ள ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 789 வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும்   குடும்ப  உணவு பங்கீட்டு     அட்டைதாரர்களில் ஒரு நபர் கொண்ட அட்டைதாரர்களுக்கு ரூ.500 செலுத்தப்படும்.
மேலும் 2-க்கு மேற்பட்ட குடும்ப நபர்களை கொண்ட அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வீதம்      நேரடி  பணப்பரி மாற்றத்தின் மூலம் இன்று (வியாழக்கிழமை) முதல் குடும்பத்தலைவியின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். இதற்காக ரூ.12 கோடியே 13 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story