மாநில செய்திகள்

நாளை முதல் 5 நாள் தரிசனத்துக்கு தடை: திருச்செந்தூர் முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் + "||" + Ban on darshan for 5 days from tomorrow: Devotees gather at Thiruchendur Murugan Temple

நாளை முதல் 5 நாள் தரிசனத்துக்கு தடை: திருச்செந்தூர் முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

நாளை முதல் 5 நாள் தரிசனத்துக்கு தடை: திருச்செந்தூர் முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
நாளை முதல் 5 நாட்களுக்கு தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருச்செந்தூர்,

நாளை (வெள்ளிக்கிழமை) முதல் தை பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல், தைப்பூசம் உள்ளிட்ட திருநாட்கள் தொடர்ந்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாட்களில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.


மேலும், தைப்பூசம் அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருவார்கள். அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பாதயாத்திரையாகவும் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவது வழக்கம்.

ஆனால், இந்தாண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 18-ந் தேதி தைப்பூசத் திருவிழா வரை தொடர்ந்து 5 நாட்கள் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அலைமோதிய கூட்டம்

இதன் காரணமாக இந்தாண்டு மாலையணிந்து விரதம் இருந்த பக்தர்கள் அனைவரும் நேற்றும், நேற்று முன்தினமும் திருச்செந்தூர் கோவிலில் குவிந்தனர். இதனால் திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும், திருச்செந்தூர் நகர் பகுதி முழுவதும் பாதயாத்திரை பக்தர்கள் மற்றும் வாகனங்களில் வந்த பக்தர்களின் கூட்டம் நிரம்பியது. பக்தர்கள் வந்த வாகனங்களால் நேற்று நகர் பகுதி முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நகரமே ஸ்தம்பித்தது.

தொடர்புடைய செய்திகள்

1. வழிபாட்டுக்கு 5 நாள் தடை எதிரொலி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் திரண்டனர்
வழிபாட்டுக்கு 5 நாள் தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று பக்தர்கள் திரண்டனர். அவர்கள், 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
2. மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி இல்லை சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி இல்லை என்றும், நீட் தேர்வு தேவையற்றது என்றும் சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
3. ஆங்கில புத்தாண்டு பிறப்பு: கோவில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதேபோல கோவில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
4. அரசு பஸ்- வேன் மோதல்; 3 பக்தர்கள் பலி பழனி கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்
காங்கேயம் அருகே அரசு பஸ்சும், வேனும் மோதிய விபத்தில் 3 பக்தர்கள் உயிரிழந்தனர். பழனி கோவிலுக்கு சென்று விட்டு திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.
5. சென்னை போரூர் அருகே லாரி மீது கார் மோதல்: தந்தை-மகன் உள்பட 3 அய்யப்ப பக்தர்கள் பலி
சென்னை போரூர் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் தந்தை-மகன் உள்பட 3 அய்யப்ப பக்தர்கள் பரிதாபமாக இறந்தனர். சபரிமலை சென்று சாமி தரிசனம் முடிந்து வீடு திரும்பியவர்களுக்கு இந்த சோகம் நேர்ந்து விட்டது.