ஈரோடு அருகே நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாடு பலி


ஈரோடு அருகே நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாடு பலி
x
தினத்தந்தி 13 Jan 2022 9:22 AM GMT (Updated: 2022-01-13T14:52:59+05:30)

ஈரோடு அருகே நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாடு பலியான சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தாளவாடி,

ஈரோடு தாளவாடியை  அடுத்த சேசன்நகர் கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் (41) விவசாயி இவர் 3 பசு மாடுகள் வளர்த்து வருகிறார்.  இன்று வழக்கம் போல் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அங்கு உள்ள மானாவாரி நிலத்தில் மாடு மேய்ந்து கொண்டிருந்த போது கீழே கிடந்த நாட்டு வெடிகுண்டை பசுமாடு கடித்துள்ளது. 

அந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பசு மாட்டின் வாய்பகுதி முழுவதும் சிதறியது ரத்தம் சொட்ட  மாடு கிழே விழுந்து உயிரிழந்தது.  இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும் போது சிலர் கட்டுபன்றிகளை வேட்டையாட நாட்டுவெடி குண்டு வைத்து வேட்டையாடி வருவதாகவும் அதை மாடுகள் கடித்து உயிரிழப்பு ஏற்படுகிறது எனவும் நாட்டு வெடிகுண்டு வைக்கும் நபர்கள் மீது வனத்துறை மற்றும் காவல் துறைநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். 


Next Story