மாநில செய்திகள்

பொங்கல் விடுமுறை முடிந்து மக்கள் திரும்பி வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் ராஜகண்ணப்பன் + "||" + Special buses will be operated to bring people back after the Pongal holiday - Minister Rajakannappan

பொங்கல் விடுமுறை முடிந்து மக்கள் திரும்பி வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் ராஜகண்ணப்பன்

பொங்கல் விடுமுறை முடிந்து மக்கள் திரும்பி வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் ராஜகண்ணப்பன்
பொங்கல் விடுமுறை முடிந்து மக்கள் திரும்பி வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழர் திருநாளான பொங்கல் விழா நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2 நாட்களாக இயக்கப்பட்ட 16 ஆயிரம் பேருந்துகளில் 5 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா பரவல் காரணமாக வருகிற ஜனவரி 16-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் பொங்கல் விடுமுறை முடிந்து, மக்கள் திரும்பி வர ஜனவரி 17-19  ந்தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சிறப்பு பேருந்துகளில் இதுவரை 1.14 லட்சம் பேர் பயணம் - போக்குவரத்துத்துறை தகவல்
பொங்கல் சிறப்பு பேருந்துகளில் இதுவரை 1.14 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.