மாநில செய்திகள்

நடுக்கடலில் மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை + "||" + Sri Lankan navy chases Rameswaram fishermen fishing in the Mediterranean

நடுக்கடலில் மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

நடுக்கடலில் மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை
நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். மீன்பிடி வலைகளையும் அறுத்து வீசினர்.
ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 400-க்கும் அதிகமான விசைப்படகுகளில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.


அப்போது 3 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரத்தை சேர்ந்த மீன்பிடி படகுகளை மீன்பிடிக்க விடாமல் எச்சரித்தனர்.

விரட்டியடிப்பு

கடலில் விரித்திருந்த வலைகளையும் அறுத்து வீசி எறிந்ததாக கூறப்படுகிறது.

அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டதால் மீனவர்கள் பாதியிலேயே கரையை நோக்கி திரும்பினர். நேற்று காலை குறைந்த அளவிலான மீன்களுடன் ராமேசுவரம் வந்தனர்.

இலங்கை கடற்படை அத்துமீலை தடுத்து, பாரம்பரிய கடல் பகுதியில் எந்த இடையூறும் இன்றி தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமேசுவரம் மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவிடம் சுமார் 7 ஆயிரம் கோடி கடன் உதவி கோருகிறது இலங்கை..!
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இலங்கையின் சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
2. இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே திருப்பதியில் சாமி தரிசனம்
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே குடும்பத்தினருடன் இன்று திருப்பதி ஏழுமைலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
3. 5 நிமிடங்கள் அந்தரத்தில் பறந்த இளைஞரால் பரபரப்பு
வானில் அதிக உயரத்தில் அவர் பறந்ததால் அவரை கீழே இறக்க முடியாமல் நண்பர்கள் திணறினர்.
4. யாழ்ப்பாணத்தில் சீனத் தூதர்: ஈழத்தமிழரை வளைக்கும் சீனா; இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து...! - ராமதாஸ்
இலங்கைத் தமிழர்களை ஆதரித்து அவர்களை வடக்கு இலங்கையில் அதிகாரம் பெற்றவர்களாக மாற்ற வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
5. நகைக்காக தாய்-மகளை கொன்று உடல்களை எரித்த இலங்கை அகதி
வீட்டுக்குள் உடல்கருகி பிணமாக கிடந்த தாய், மகள் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர்களை நகைக்காக கொடூரமாக தாக்கி கொன்ற இலங்கை அகதி போலீசாரிடம் சிக்கினார்.