மாநில செய்திகள்

திருச்சி சிறையில் இருந்து விடுதலையான ராஜேந்திர பாலாஜி சிவகாசி திரும்பினார் + "||" + Rajendra Balaji, who was released from Trichy jail, returned to Sivakasi

திருச்சி சிறையில் இருந்து விடுதலையான ராஜேந்திர பாலாஜி சிவகாசி திரும்பினார்

திருச்சி சிறையில் இருந்து விடுதலையான ராஜேந்திர பாலாஜி சிவகாசி திரும்பினார்
சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருச்சி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு சிவகாசி திரும்பினார்.
விருதுநகர்,

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்பட 3 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராஜேந்திரபாலாஜி கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.


இந்தநிலையில், ராஜேந்திரபாலாஜிக்கு 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து நேற்று காலை திருச்சி சிறையில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். அவரை திருச்சி சிறை வாசலில் விருது நகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்றனர்.

வரவேற்பு

பின்னர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தனது காரில் திருச்சியில் இருந்து சிவகாசிக்கு வந்தார். மதியம் 1 மணிக்கு சிவகாசி அருகில் உள்ள திருத்தங்கல் பாலாஜி நகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அப்போது அங்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு சால்வை கொடுத்து வரவேற்றனர். பின்னர் அவர் சற்று நேரம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...!
ஜாமீன் வழங்ப்பட்டதையடுத்து திருச்சி மத்திய சிறையில் இருந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று வெளியே வந்தார்.
2. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன்
சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
3. விசாரித்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
ராஜேந்திர பாலாஜி மீது அளிக்கப்பட்டுள்ள புகார் விசாரித்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. மோசடி புகாரில் கைது: ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் மனு நாளை விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு
வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்த புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு நாளைக்கு தள்ளிவைத்தது
5. ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறையில் அடைப்பு..!
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.