நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மக்கள் நீதி மய்யத்தின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் கமல்ஹாசன் வெளியிட்டார்


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மக்கள் நீதி மய்யத்தின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் கமல்ஹாசன் வெளியிட்டார்
x
தினத்தந்தி 13 Jan 2022 9:04 PM GMT (Updated: 13 Jan 2022 9:04 PM GMT)

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மக்கள் நீதி மய்யத்தின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் கமல்ஹாசன் வெளியிட்டார்.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் வர இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் நகர்ப்புறங்களில் நாம் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளோம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட இருக்கும் தகுதிசால் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை இன்று (நேற்று) வெளியிடுகிறேன்.

வேட்பாளர்கள் இக்கணம் முதல் வெற்றி ஒன்றையே இலக்காக கொண்டு ஒவ்வொரு வாக்காளரிடமும் நமது கொள்கைகள், செயல்திட்டம், சின்னம் ஆகியவற்றை கொண்டு சேர்க்க வேண்டும். நடக்க இருக்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மக்கள் நீதி மய்யத்துக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும்.

இது முதற்கட்ட பட்டியல்தான். அடுத்தடுத்த பட்டியல் விரைவில் வெளியாகும். தேர்தல் களத்தில் வாகை சூட வேட்பாளர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கமல்ஹாசன் வெளியிட்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் கோவை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் 47 நிர்வாகிகள், தொண்டர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது.

Next Story