மாநில செய்திகள்

பதநீர் இறக்குபவர், விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது + "||" + No action should be taken against the seller or seller

பதநீர் இறக்குபவர், விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது

பதநீர் இறக்குபவர், விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது
பதநீர் இறக்குபவர், விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு.
சென்னை,

பதநீர் இறக்குபவர்கள், விற்பவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு சைலேந்திரபாபு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-


பனைமரம், தென்னை மரம் ஆகியவற்றில் இருந்து பதநீர் இறக்குவது மற்றும் பனைவெல்லம் தயாரிப்பது போன்றவை சட்டபூர்வமான செயல்கள் ஆகும். இதற்காக அரசு கூட்டுறவு பனைவெல்ல சங்கங்களும் உள்ளன. பதநீர் ஒரு இயற்கையான குளிர்பானம் ஆகும். பதநீர் சாலை ஓரங்களில் விற்பனை செய்யப்படுகிறது. சில காவல் நிலையங்களில் இந்த வேளாண் பணியை செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதாகவும், கைது நடவடிக்கை எடுப்பதாகவும், தொழிலாளர்களை துன்புறுத்துவதாகவும் புகார்கள் வந்துள்ளன.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மாநகர போலீஸ் கமிஷனர்கள், இயற்கை பானமான பதநீரை இறக்குபவர்கள், விற்பவர்கள், பனை வெல்லம் தயாரிப்பவர்கள் மற்றும் இது சார்ந்த தொழில் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி தமிழக அரசு உத்தரவு
ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும், போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு கட்டாயம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
2. சென்னை மாநகராட்சியில் உள்ள மொத்த வார்டுகளை மண்டல வாரியாக பிரிக்கும் முறை ரத்து
சென்னை மாநகராட்சியில் உள்ள மொத்த வார்டுகளை மண்டல வாரியாக ஒதுக்கீடு செய்யும் முறையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
3. தண்ணீர் திருட்டில் ஈடுபடும் விவசாயிகளுக்கு விவசாய கடன் வழங்கக்கூடாது ஐகோர்ட்டு உத்தரவு
தண்ணீர் திருட்டில் ஈடுபடும் விவசாயிகளுக்கு விவசாய கடனோ, மானிய விலையில் உரமோ, விதையோ வழங்கக்கூடாது என்றும், அவர்களை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
4. வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம்: கைதான தாசில்தாருக்கு நிபந்தனை ஜாமீன்
வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம்: கைதான தாசில்தாருக்கு நிபந்தனை ஜாமீன் - சென்னை கோர்ட்டு உத்தரவு.
5. வீடு, வீடாக சென்று பிரசார பணியை இன்றே தொடங்க கெஜ்ரிவால் உத்தரவு
வீடு, வீடாக சென்று பிரசார பணியை இன்றே தொடங்குங்கள் என்று கட்சியினருக்கு கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.