மாநில செய்திகள்

ராமேசுவரம் மீனவர்களுக்கு வருகிற 27ந்தேதி வரை சிறை; உறவினர்கள் அதிர்ச்சி + "||" + Rameswaram fishermen jailed till 27th; Relatives shocked

ராமேசுவரம் மீனவர்களுக்கு வருகிற 27ந்தேதி வரை சிறை; உறவினர்கள் அதிர்ச்சி

ராமேசுவரம் மீனவர்களுக்கு வருகிற 27ந்தேதி வரை சிறை; உறவினர்கள் அதிர்ச்சி
இலங்கை சிறையில் வாடும் ராமேசுவரம் மீனவர்கள் 43 பேரை பொங்கலுக்கு விடுவிக்காமல் ஜனவரி 27ந்தேதி வரை காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராமேசுவரம்,ராமேசுவரத்தில் இருந்து டிசம்பர் 19ந்தேதி மீன்பிடிக்க சென்ற 43 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இவர்களை விடுவிக்க கோரி ராமேசுவரம் பகுதி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக மீனவர்களை விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் அந்நாட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 3வது முறையாக நீதிமன்ற வாய்தா நாளான நேற்று 43 பேரையும் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.  மீனவர்கள் விடுவிக்கப்பட்டு குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாட வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்த்த நிலையில் அவர்களின் காவலை நீட்டித்து ஜனவரி 27ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதனால் மீனவர் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. முன்னாள் அரசு ஊழியருக்கு 2 ஆண்டு சிறை
லஞ்சம் வாங்கிய முன்னாள் அரசு ஊழியருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
2. கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 10 பேருக்கு சிறை
விருதுநகர் அருகே கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 10 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
3. பண்ருட்டி எலக்ட்ரீசியனுக்கு 10 ஆண்டு சிறை
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக எலக்ட்ரீசியனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அவரது பெற்றோருக்கு தலா 7 ஆண்டு தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
4. பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
5. சமையல் மாஸ்டருக்கு 10 ஆண்டு சிறை
காதலியை கர்ப்பிணியாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த சமையல் மாஸ்டருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.