மாநில செய்திகள்

கோவையில் 133 கிலோ குட்கா பறிமுதல் + "||" + 133 kg of gutka seized in Coimbatore

கோவையில் 133 கிலோ குட்கா பறிமுதல்

கோவையில் 133 கிலோ குட்கா பறிமுதல்
கோவையில் 133 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை,


கோவை மாவட்டத்தில் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சந்தேக இடங்களில் சோதனையும் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, கிணத்துக்கடவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அரசம்பாளையம் பிரிவு, காமராஜ் நகரில் உள்ள வீடு ஒன்றில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இதில், வீட்டுக்குள் பெட்டிக்கடைகளுக்கு சப்ளை செய்ய அடுக்கி வைக்கப்பட்டிருந்த, 20 மூட்டைகளில் இருந்த 133 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.  இதுதொடர்பாக, சொலவம்பாளையத்தை சேர்ந்த மளிகைக்கடை உரிமையாளர் சங்கர் (வயது 32) என்பவர் கைது செய்யப்பட்டார். எங்கிருந்து குட்கா வாங்கப்பட்டது.  எந்தெந்த கடைகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. மொத்த விற்பனையாளர் யார் என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் மர்மச்சாவு உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
கும்பகோணம் ரெயில் நிலையத்தில் புதுச்சேரி மாநில முன்னாள் எம்.எல்.ஏ. மகன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. கோர்ட்டில் சரணடைந்தவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை
ஈரோடு ஜவுளிக்கடை உரிமையாளர் கடத்தல் வழக்கில் கோர்ட்டில் சரணடைந்தவரை போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் மீட்கப்பட்டது.
3. அரக்கோணத்தில் போலீசார், கடற்படை வீரர்கள் 45 பேருக்கு கொரோனா
போலீசார், கடற்படை வீரர்கள் 45 பேருக்கு கொரோனா
4. கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சாகசம்; 2 பேர் கைது
சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
5. பெண்களிடம் நகை திருட்டை தடுக்க சிறப்பு ஏற்பாடு
பெண்களிடம் நகை திருட்டை தடுக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.