மாநில செய்திகள்

மீனவர்கள் மீதான அத்துமீறலை இலங்கை கைவிட மத்திய அரசு எச்சரிக்க வேண்டும் + "||" + The Central Government should warn Sri Lanka to abandon the encroachment on fishermen

மீனவர்கள் மீதான அத்துமீறலை இலங்கை கைவிட மத்திய அரசு எச்சரிக்க வேண்டும்

மீனவர்கள் மீதான அத்துமீறலை இலங்கை கைவிட மத்திய அரசு எச்சரிக்க வேண்டும்
மீனவர்கள் மீதான அத்துமீறலை இலங்கை கைவிட மத்திய அரசு எச்சரிக்க வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.
சென்னை,

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய 'டுவிட்டர்' பதிவில் கூறி இருப்பதாவது:-

வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே 10 படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியடித்துள்ளனர்; அவர்களின் வலைகள் அறுத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன; பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை படையினர் தாக்குதல் நடத்துவது கடந்த ஒரு வாரத்தில் இது இரண்டாவது முறையாகும். கடந்த 10-ந் தேதி நள்ளிரவிலும் கச்சத்தீவு பகுதியில் இதே போன்று தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த அதிர்ச்சி மறைவதற்குள் அடுத்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


டிசம்பர் 18-ந்தேதி கைது செய்யப்பட்ட 42 மீனவர்களும், 20-ந்தேதி கைது செய்யப்பட்ட 13 மீனவர்களும் இலங்கை அரசால் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. இன்னொருபுறம் நடுக்கடலில் இலங்கை படையின் அத்துமீறல் தொடருகிறது. இவற்றுக்கு முடிவு எப்போது?. ஒரு புறம் இலங்கைக்கு இந்தியா நிதியுதவியும், ராணுவ உதவிகளையும் வாரி வழங்குகிறது. மறுபுறம் தமிழக மீனவர்களை இலங்கைப் படை கொடுமைப்படுத்துகிறது. இது என்ன நியாயம்? மீனவர்கள் மீதான அத்துமீறலை கைவிடும்படி இலங்கையை, இந்திய அரசு எச்சரிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் கொரோனா ஆய்வு கட்டணத்தை குறைக்க வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழகத்தில் கொரோனா ஆய்வு கட்டணத்தை குறைக்க வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
2. ‘ஆன்லைன்’ சூதாட்டத்தை தடைசெய்ய தாமதம் கூடாது டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
மேலும் ஒரு இளைஞர் தற்கொலை: ‘ஆன்லைன்’ சூதாட்டத்தை தடைசெய்ய தாமதம் கூடாது டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
3. தமிழகத்துக்கு புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் தேவையில்லை டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஏல பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் தமிழகத்துக்கு புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் தேவையில்லை மத்திய அரசுக்கு, டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
4. தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு.
5. காவிரி பாசன மாவட்டங்களில் நெற்பயிர் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்
காவிரி பாசன மாவட்டங்களில் நெற்பயிர் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.