மாநில செய்திகள்

சென்னை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு + "||" + Change in Chennai-Nagercoil Express train service - Southern Railway Announcement

சென்னை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
பராமரிப்பு பணி காரணமாக சென்னை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை எழும்பூர் பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.

* சென்னை எழும்பூர்-நாகர்கோவில் வாராந்திர அதிவேக எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:12667), வரும் 20-ந்தேதி முதல் மார்ச் மாதம் 3-ந்தேதி வரை எழும்பூர்-தாம்பரம் வரை பகுதியாக ரத்து செய்யப்பட்டு, இரவு 7.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

* நாகர்கோவில்-எழும்பூர் வாராந்திர அதிவேக எக்ஸ்பிரஸ் (12668), வரும் 21-ந்தேதி முதல் பிப்ரவரி 26-ந்தேதி வரை தாம்பரம்-எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.