உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்: சீறிப்பாய்ந்த காளைகள்...!


உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்: சீறிப்பாய்ந்த காளைகள்...!
x
தினத்தந்தி 14 Jan 2022 2:18 AM GMT (Updated: 14 Jan 2022 2:26 AM GMT)

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மதுரை,

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றதாகும். 

அதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கல் தினமான இன்று நடக்கிறது பாலமேட்டில் நாளையும், அலங்காநல்லூரில் 17-ந் தேதி நடக்கிறது.

இந்நிலையில், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தற்போது தொடங்கியுள்ளது. 700 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டில் களமிறங்கியுள்ளனர்.

நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர். மதுரை மாவட்ட கலெக்டர் உள்பட முக்கிய நபர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். 

முதலில் கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. அதன் பின்னர் காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன. அவற்றை மாடுபிடி வீரர்கள் அடக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவனியாபுரம் பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய போட்டி நடைபெறும் இடத்தில் மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர். 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காண குறைவான பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

Next Story