மாநில செய்திகள்

பொங்கல் திருநாளான இன்று, பிளாஸ்டிக் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுப்போம் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் + "||" + Today, Pongal, we pledge not to use plastic - Chief Minister MK Stalin

பொங்கல் திருநாளான இன்று, பிளாஸ்டிக் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுப்போம் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பொங்கல் திருநாளான இன்று, பிளாஸ்டிக் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுப்போம் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பொங்கல் திருநாளான இன்று, பிளாஸ்டிக் பைகளை இனிப் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுப்போம் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,

தமிழர்கள் என்றுமே நன்றி உணர்வு மிக்கவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் பொங்கல் பண்டிகை. அந்த வகையில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இன்று பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். 

தமிழர் திருநாளான பொங்கல் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்துகள் கூறியுள்ளார். மேலும் அவர், 'இயற்கையோடு இயைந்து தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் திருநாளான இன்று, பிளாஸ்டிக் பைகளை இனிப் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டு, மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவோம்!' என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள் - தமிழ் இனநாள் - பொங்கல் மகிழ்நாள் நல்வாழ்த்துகள்! கழக ஆட்சி மலர்ந்து கொண்டாடும் முதல் பொங்கல் திருநாளில் மேலும் மேலும் தமிழ்நாட்டை மேன்மையுறச் செய்யும் ஊக்கத்தைப் பெறுகிறேன். உங்கள் அன்பால் ஊக்கத்தை உழைப்பாய் மாற்றிடுவேன்'.

'இயற்கையோடு இயைந்து தமிழர்கள் நாம் கொண்டாடும் பொங்கல் திருநாளான இன்று, பிளாஸ்டிக் பைகளை இனிப் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டு, #மீண்டும்மஞ்சப்பை பயன்படுத்துவோம்!' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. "கடந்த 10 ஆண்டுகளாக குட்டிச்சுவராக்கி வைத்துள்ளார்கள்" மழை பாதிப்புகளை ஆய்வு செய்த மு.க. ஸ்டாலின்
ஆழ்வார்பேட்டையில் வெள்ளநீரை வெளியேற்றும் பணியை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
2. உடற்பயிற்சி செய்யும் முதல்-அமைச்சர் - புதிய வீடியோ வைரல்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
3. மழை வெள்ளம்: டெல்டா மாவட்டங்களில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு...!
மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
4. தேவர் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
5. கையடக்க கணினியை உருவாக்கிய மாணவர்; முதல்-அமைச்சர் நேரில் அழைத்து பாராட்டு
கையடக்க CPU-ஐ உருவாக்கியுள்ள 9-ம் வகுப்பு மாணவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.