'தமிழக மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துகள்' - எடப்பாடி பழனிசாமி


தமிழக மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துகள் - எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 14 Jan 2022 4:02 AM GMT (Updated: 2022-01-14T09:32:10+05:30)

எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழர்கள் என்றுமே நன்றி உணர்வு மிக்கவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் பொங்கல் பண்டிகை. அந்த வகையில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இன்று பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். 

தமிழர் திருநாளான பொங்கல் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் 'உலகிற்கே உணவு அளிக்கும் உன்னத தொழில் செய்யும் உழவர்களின் மேன்மையை போற்றும் அறுவடை திருநாளில் ,தமிழர்கள் இல்லங்களில் அன்பும்,அமைதியும்,வளமும், நலமும் பெருகி மகிழ்ச்சி பொங்கட்டும்.

அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துகள்' என்று தெரிவித்துள்ளார்.


Next Story