'தீமைகள் அகன்று நன்மைகள் செழிக்கட்டும்' - ஓ.பன்னீர்செல்வம் பொங்கல் வாழ்த்து


தீமைகள் அகன்று நன்மைகள் செழிக்கட்டும் - ஓ.பன்னீர்செல்வம் பொங்கல் வாழ்த்து
x
தினத்தந்தி 14 Jan 2022 6:49 AM GMT (Updated: 2022-01-14T12:19:35+05:30)

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழர்கள் என்றுமே நன்றி உணர்வு மிக்கவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் பொங்கல் பண்டிகை. அந்த வகையில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இன்று பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். 

இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், பொங்கல் திருநாளில் தீமைகள் அகன்று நன்மைகள் செழிக்கட்டும் என்று கூறி தமிழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'என் அன்பார்ந்த தமிழ் மக்களே, உங்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

சாதி மத வேறுபாடின்றி, ஏழை பணக்காரர் என்ற வித்தியாசமின்றி, படித்தவர் படிக்காதவர் என்ற பேதமின்றி நன்றியுணர்வு என்னும் ஒரே நோக்கத்தோடு இயற்கைக்கு நன்றி செலுத்தும் தமிழர் திருநாளாம், பொங்கல் திருநாளில் தீமைகள் அகன்று நன்மைகள் செழிக்கட்டும்; 

உழவர்கள் ஆக்கமும் ஊக்கமும் பெற்று மகிழ்ச்சியடையட்டும் என மனதார வாழ்த்துகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

Next Story