மாநில செய்திகள்

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள்-மாணவர்களுக்கு கொரோனா + "||" + Corona for Doctors-Students at Theni Government Medical College Hospital

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள்-மாணவர்களுக்கு கொரோனா

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள்-மாணவர்களுக்கு கொரோனா
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள், மாணவர்கள் என 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேனி,

தேனி மாவட்டத்தில் கொரோனா 3-வது அலை பரவல் வேகம் எடுத்துள்ளது. தினமும் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் நேற்று 570 பேருக்கு மாதிரி சேகரித்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவு இன்று காலை வெளியானது.

அதில், 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்களில் 143 பேர் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 27 பேர் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் 2 டாக்டர்கள், 3 பயிற்சி டாக்டர்கள், 4 மாணவ-மாணவிகள் என 9 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.