பாலமேடு ஜல்லிக்கட்டு: 6ம் சுற்று நிறைவு: 545 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன; 28 பேர் காயம்..!!


பாலமேடு ஜல்லிக்கட்டு:  6ம் சுற்று நிறைவு: 545 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன; 28 பேர் காயம்..!!
x
தினத்தந்தி 15 Jan 2022 11:00 AM GMT (Updated: 2022-01-15T16:30:29+05:30)

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 6ம் சுற்று நிறைவுபெற்று உள்ளது. 545 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன; 28 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

மதுரை

மதுரை பாலமேடு கிராமத்தில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 

போட்டி தொடங்கும் முன்பாக ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.முன்னதாக பாலமேடு கிராம கமிட்டி மகாலிங்க சாமி கோவிலில் வழிபாடு மேற்கொண்டனர். 

காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சீறி பாய்ந்து வரும் காளைகளை அடக்கிய காளையர்களுக்கும், காளையர்களுக்கு போக்குக் காட்டிய காளைகளுக்கும் கட்டில், பீரோ, தங்கக் காசு உள்ளிட்ட பலவகையான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. 

இதற்கிடையே 11.30 மணியளவில் வாடிவாசல் பின்பகுதியில் காளைகளை சட்டவிரோதமாக அவிழ்த்து விட முயன்ற நபர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

பாலமேடு ஜல்லிக்கட்டில்  6 சுற்றுகளில் இதுவரை 545 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.180 மாடுபிடி வீரர்கள் பங்குபெற்று உள்ளனர். 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

பிடித்து பார் என சவால்விட்டு காளைகள் பாய்ந்து வருகிறது. அடக்கியே தீருவேன் என களத்தில் மாடுகளுடன் காளையர்கள் மல்லுக்கட்டி வருகின்றனர்.

பிரபாகரன் என்பவர் 18 மாடுகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார்.

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மாடுபிடி வீரர்கள் 2 பேர் வெளியேற்றப்பட்டனர். 

Next Story