புதுவையில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா மாகியில் 2 முதியவர்கள் பலி


புதுவையில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா மாகியில் 2 முதியவர்கள் பலி
x
தினத்தந்தி 15 Jan 2022 2:29 PM GMT (Updated: 15 Jan 2022 2:29 PM GMT)

மாகியில் 2 முதியவர்கள் பலியான நிலையில் புதுச்சேரியில் ஒரேநாளில் 1,123 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அசுர வேகம் எடுத்து இருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி
மாகியில் 2 முதியவர்கள் பலியான நிலையில் புதுச்சேரியில் ஒரேநாளில் 1,123 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அசுர வேகம் எடுத்து இருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

3-வது அலை

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பிறகு புதுவையில் கொரோனா தொற்று பரவல் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நாள்தோறும் பாதிப்பு ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. 
இது கொரோனா 3-வது அலையாக உருவெடுத்துள்ளது. இந்தநிலையில்  இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 344 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 1,213 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதாவது, புதுவையில் 1,100, காரைக்காலில் 93, ஏனாமில் 3, மாகியில் 17 என பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் 123 பேர், வீடுகளில் 6 ஆயிரத்து 662 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 785 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 550 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 84 பேர் குணமடைந்தனர்.

அசுர வேகம்

மாகி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 88 வயது முதியவர், பள்ளூர் பகுதியை சேர்ந்த 68 வயது முதியவர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இவர்களை சேர்த்து பலியானோர் எண்ணிக்கை 1,886 ஆக அதிகரித்துள்ளது.
புதுவையில் தொற்று பரவல் 51.75 சதவீதமாகவும், குணமடைவது 93.65 சதவீதமாகவும் உள்ளது. நாடு முழுவதும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ள போதிலும் புதுவை மாநிலத்தில் வேறு மாநிலத்தில் இல்லாத அளவுக்கு தொற்று அசுர வேகத்தில் பரவி வருவரு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முதல் தவணை தடுப்பூசியை 395 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 260 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 108 பேரும் செலுத்திக்கொண்டுள்ளனர். இதுவரை 14 லட்சத்து 95 ஆயிரத்து 877 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Next Story