மாநில செய்திகள்

புதுச்சேரி மசாஜ் சென்டரில் விபசாரம் 2 பேர் கைது 6 பெண்கள் மீட்பு + "||" + Police conducted a raid at the Puducherry Massage Center. It was revealed that he kept women in 2 rooms there and engaged in prostitution. 6 beauties were rescued. Police arrested 2 teenagers.

புதுச்சேரி மசாஜ் சென்டரில் விபசாரம் 2 பேர் கைது 6 பெண்கள் மீட்பு

புதுச்சேரி  மசாஜ் சென்டரில் விபசாரம் 2 பேர் கைது  6 பெண்கள் மீட்பு
புதுச்சேரி மசாஜ் சென்டரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு 2 அறைகளில் பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. 6 அழகிகள் மீட்கப்பட்டனர். 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி
புதுச்சேரியில்  ஸ்பா என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக புகார் எழுந்தது. அதன்பேரில் போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி விபசாரத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து அழகிகளை மீட்டு வருகின்றனர். 
அண்ணா சாலையில் உள்ள மற்றொரு மசாஜ் சென்டரான ஸ்பாவில் விபசாரம் நடப்பதாக தகவல் அறிந்து ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் மனோஜ், சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். 
அப்போது அங்கு தனித்தனியாக இருந்த 2 அறைகளில் பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. இதில் தொடர்புடையவர்களை பிடித்து விசாரித்ததில், கடலூர் மஞ்சகுப்பம் மதன் என்கிற மதன்ராஜ் (வயது 31), புதுவை வில்லியனூர் திருவேணி நகரை சேர்ந்த கார்த்திக் (32) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். 
அங்கிருந்த 6 அழகிகள் மீட்கப்பட்டு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர். விபசார தொழிலில் ஈடுபட்ட மற்றொரு நபரான உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்த சிலம்பரசனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.