திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து ரங்கசாமி மரியாதை


திருவள்ளுவர்  சிலைக்கு மாலை அணிவித்து ரங்கசாமி மரியாதை
x

திருவள்ளுவர் தினத்தையொட்டி அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

புதுச்சேரி
திருவள்ளுவர் தினத்தையொட்டி அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருவள்ளுவர் தினம்

புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில்  இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய் சரவணன் குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், நேரு என்கிற குப்புசாமி, கே.எஸ்.பி. ரமேஷ், பாஸ்கர், லட்சுமிகாந்தன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தி.மு.க.

புதுச்சேரி லப்போர்த் வீதியில் தி.மு.க. அலுவலகத்தில் நடந்த விழாவில் மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா தலைமை தாங்கி திருவள்ளுவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் மாநில அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் சம்பத், செந்தில்குமார், துணை அமைப்பாளர்கள் ஏ.கே.குமார், செந்தில்குமரன், சண்.குமரவேல், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, தைரியநாதன், ஜே.வி.எஸ்.சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் பல்வேறு சமூக அமைப்புகள், தமிழ் அமைப்புகள் சார்பிலும் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சபாநாயகர் செல்வம்

நோணாங்குப்பம் படகு குழாம் எதிரே திருவள்ளுவர் உருவச்சிலைக்கு சபாநாயகர் செல்வம் மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு திருக்குறள் புத்தகங்களை வழங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. தங்க விக்ரமன்,  பா.ஜ.க. பிரமுகர்கள் ரகுபதி, சக்திவேல், லட்சுமிகாந்தன், சக்திபாலன், ஜோதிசெந்தில்கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. புதுச்சேரி மாநில பா.ம.க. சார்பில் மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. 
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் தலைமையில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் உதவிப்பொறியாளர் யுவராஜ், இளநிலை பொறியாளர் சரஸ்வதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story