தமிழகம் முழுவதும் ரூ.3½ கோடி அபராதம் வசூல் - முக கவசம் அணியாத 1.64 லட்சம் பேர் சிக்கினர்


தமிழகம் முழுவதும் ரூ.3½ கோடி அபராதம் வசூல் - முக கவசம் அணியாத 1.64 லட்சம் பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 16 Jan 2022 10:05 PM GMT (Updated: 16 Jan 2022 10:05 PM GMT)

கடந்த வாரத்தில்: தமிழகம் முழுவதும் ரூ.3½ கோடி அபராதம் வசூல் - முக கவசம் அணியாத 1.64 லட்சம் பேர் சிக்கினர்.

சென்னை,

தமிழகம் முழுவதும் 7.1.2022 முதல் முடிந்து போன கடந்த 1 வாரத்தில், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியவர்கள் மீது வழக்குகள் போடப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வகையில் ரூ.3.45 கோடி அபராத தொகை வசூலிக்கப்பட்டது.முக கவசம் அணியாதவர்கள் மட்டும் 1.64 லட்சம் பேர் வழக்கில் சிக்கினார்கள். மேலும் குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 96 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை நகரில் அதிகபட்சமாக 1 வாரத்தில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக 43 ஆயிரத்து 417 பேர்கள் வழக்கில் மாட்டினார்கள். அவர்களிடம் இருந்து ரூ.86 லட்சம் அபராதமாக வசூலானது. அடுத்தகட்டமாக வடக்கு மண்டலத்தில் 40 ஆயிரத்து 148 பேர்களிடமிருந்து, ரூ.83 லட்சம் அபராத தொகை பெறப்பட்டது.

மேற்கண்ட தகவல் டி.ஜி.பி.சைலேந்திரபாபு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story