சென்னையில் திடீரென பெய்த மழை


சென்னையில் திடீரென பெய்த மழை
x
தினத்தந்தி 17 Jan 2022 12:36 AM GMT (Updated: 2022-01-17T06:06:51+05:30)

சென்னையில் இன்று காலை திடீரென பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.


சென்னை,


சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கடந்த 2 நாட்களுக்கு முன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் வரும் 16, 17 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்யும்.  மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், சென்னையில் இன்று காலை திடீரென பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.  சென்னை புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி, பெரியமேடு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்துள்ளது.


Next Story