மாநில செய்திகள்

தமிழக ஊர்தி நிராகரிப்பு: பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் + "||" + TN CM Mk Stalin writes to PM modi

தமிழக ஊர்தி நிராகரிப்பு: பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்

தமிழக  ஊர்தி நிராகரிப்பு: பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்
குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுப்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,

தலைநகர் புதுடெல்லியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு வரும் 26-ம் தேதி பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநிலங்களின் சார்பில் கலை பண்பாட்டு அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம்.  இந்நிலையில்  இந்த ஆண்டு குடியரசு தின நிகழ்வில் தமிழக ஊர்தி பங்கேற்க அனுமதி இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அலங்கார ஊர்திகளை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிபுணர் குழு தேர்வு செய்கிறது. தமிழக அரசு சார்பில் வேலு நாச்சியார், வ.உ.சி உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களை சித்தரிக்கும் வகையில் அலங்கார ஊர்திக்கான கருத்துரு வழங்கப்பட்டிருந்தது.   

தமிழகத்தின் சார்பில் வழங்கப்பட்டிருந்த அலங்கார ஊர்திக்கான கருத்துருவை நிபுணர் குழு நிராகரித்தது. இதற்கு, கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பங்கேற்கும் மாநிலங்களின் எண்ணிக்கை 12-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.  

இந்த நிலையில், குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுப்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில், குடியரசு தின அணிவகுப்பில் விடுதலை போராட்ட வீரர்களின் உருவகங்கள் அடங்கிய தமிழ்நாட்டின் ஊர்தி மறுக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு, விடுதலை போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் - நடிகர் விஜய் சந்திப்பு
சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் இருவரும் சந்தித்தனர்.
2. டெல்லியில் தி.மு.க. அலுவலகத்தை திறந்து வைத்தார் மு.க ஸ்டாலின்.. சோனியா காந்தி பங்கேற்பு
டெல்லியில் பிரமாண்டமாக கட்டப் பட்டுள்ள தி.மு.க. அலுவலகத்தை சோனியாகாந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் முன்னிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
3. இளமையாக இருப்பது எப்படி என்பது பற்றி ஸ்டாலின் ஒரு புத்தகம் எழுத வேண்டும் - ராகுல் காந்தி சுவாரஸ்ய பேச்சு
ஸ்டாலினுக்கு 69 வயது என்றபோது என் தாயார் நம்பவே இல்லை.. கூகுள் செய்து பார்த்தார்... எப்படி இளமையாக இருக்கிறேன் என்று ஸ்டாலின் இன்னொரு புத்தகம் எழுத வேண்டும்” என ராகுல் காந்தி கலகலப்பாக பேசினார்.
4. தமிழ்நாட்டில் 3,000 ஆண்டுகளாக வேறு எந்த கொள்கைகளையும் திணிக்க முடியவில்லை - ராகுல் காந்தி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை நீண்ட நெடிய போராட்டம் நிறைந்தது என்பதால் சுயசரிதை நூலை எழுதி உள்ளார் என ராகுல் காந்தி பேசினார்.
5. தமிழில் வணக்கம் கூறி தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என நினைக்கின்றனர்- பிரதமர் மோடி மீது மு.க ஸ்டாலின் விமர்சனம்
தமிழில் வணக்கம் கூறி தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என பிரதமர் நினைக்கிறார் என முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.